திங்கள், 5 ஆகஸ்ட், 2013

இயக்குனர் சேரன் மகள் காதல் - கோ.ஜெயக்குமார்.

இயக்குனர் சேரன் மகள் காதல் - கோ.ஜெயக்குமார்.
டைரக்டர் சேரன் மகள் தாமினியை காதலிக்கும் உதவி டைரக்டர் சந்துரு இன்று காலை 11 மணிக்கு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
971212_458443550907820_1886018468_n
சேரன் மகள் தாமினியும் நானும் இரண்டு வருடங்களாக காதலிக்கிறோம். சேரனுக்கு தெரிந்ததும் என்னை மிரட்டினார். மகளுடன் பேச் கூடாது என்றார். நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். அதன் பிறகு சேரனிடம் மன மாற்றம் ஏற்பட்டது. இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றார். சந்தோஷப்பட்டோம்.
523884_385402291545280_46997407_n
காதல் வலையில் சிக்கிய சேரன் மகள், காதலனுடன்தான் செல்வேன் என்று தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார். டைரக்டர் சேரன் மகள் தாமினியும், உதவி இயக்குனர் சந்துருவும் காதலிக்கிறார்கள். அவருடைய காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமினி புகார் கொடுத்தார்.
DSC_0078
காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். காதலனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து சேரன், அவரது மனைவி செல்வராணி, மகள் தாமினி ஆகியோரிடம் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். துணை கமிஷனர் சிவக்குமார், உதவி கமிஷனர் ஷியாமளாதேவி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது தாமினிக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள்.
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Aug/ba986020-37b5-429b-8146-f21989e2e209_S_secvpf.gif
தற்போது படித்து கொண்டு இருக்கும் தாமினியிடம் படிப்பை முடித்த பிறகு திருமணம் பற்றி முடிவு செய்யலாம். அதுவரை பெற்றோரிடம் இருக்கும் படி அறிவுரை கூறினார்கள். ஆனால் அதை தாமினி ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்று கூறினார். நேற்று நடந்த விசாரணையின்போது காதலன் சந்துரு வரவில்லை. அவர் கோவைக்கு சென்று இருந்தார். ஆனால் சந்துருவின் அம்மா, அக்காள் ஆகியோர் வந்திருந்தனர். மகளிடம் சேரன் கெஞ்சினார். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வீட்டிற்கு வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின் அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார்.
http://www.soundcameraaction.com/wp-content/uploads/2013/08/Cheran-Daughter-complaint-stills7-470x358.jpg
நள்ளிரவு வரை போலீசார் தாமினிக்கு ‘கவுன்சிலிங்’ கொடுத்தனர். ஆனால் அவர் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை. இந்த நிலையில் இன்று 2–வது நாளாக தாமினிக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தாமினி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்திற்கு இன்று வந்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினார். படிக்க கூடிய வயதில் படிக்க வேண்டும், காதல், திருமணம் போன்றவற்றை அதன் பிறகு முடிவு செய்யலாம். பெற்றொருடன் செல்வதுதான் தாமினிக்கு பாதுகாப்பு என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். காதலனுடன்தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_73470270634.jpg
இதேபோல காதலன் சந்துருவுக்கும் தனியாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவரும் தாமினியுடன் வாழ்வேன் என்று பிடிவாதமாக கூறினார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, தாமினி காதல் வலையில் விழுந்து விட்டார். அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். அவருக்கு வயது 19 ஆகிறது. சான்றிதழ் பார்த்த பிறகு தான் அவர் மேஜர் வயதை கடந்துள்ளார் என்று தெரிந்தது. அதனால் ஓரளவிற்கு தான் அவருக்கு அறிவுரை கூற முடியும். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரது விருப்பம்.
http://www.vikatan.com/news/images/cheran%20200b.jpg
ஆனால் தாமினி பெற்றோருடன் செல்ல விரும்ப வில்லை. காதலனுடன் செல்லவே விரும்புகிறார் என்றார். இதற்கிடையே சேரனின் மனைவி செல்வராணி நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் மயங்கி விழுந்துள்ளார். கணவர் மீது போலீசில் மகள் புகார் கொடுத்தது, போலீசார் விசாரணைக்கு சேரனை அழைத்தது சென்றது போன்றவற்றால் செல்வராணி மன உளைச்சலுக்கு ஆளானதால் அவருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.
http://tamil.oneindia.in/img/2013/08/04-1375610884-selvarani-cheran87-600-jpg.jpg
இந்த நிலையில் தாமினிக்கு உடல் நிலை சரி இல்லை என்று தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து போனார். கோடம்பாக்கம் பெட்ரோல் பங்கில் வைத்து சேரன் பெரிய டைரக்டர் அவர் மகளை மறந்து விடு இல்லாவிட்டால் காரை ஏற்றி கொன்று விட்டு விபத்து என்று சொல்லிவிடுவோம். நீ சினிமாவில் இருக்கிறாய் உன்னை வளர விட மாட்டோம் என்று அச்சுறுத்தினர். அப்போது சேரனும் ஆட்களுடன் அங்கு வந்தார். இவனிடம் என்ன பேச்சு என்று சொல்லி சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை அடித்தனர் நான் அங்கிருந்து ஓடினேன்.
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Aug/e86db369-92bd-4089-a2c9-f787f93a2866_S_secvpf.gif
ரோட்டில் என்னை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். இது பற்றி எனது குடும்பத்தினருக்கு தெரிந்ததும் பயந்தனர். சேரன் செல்வாக்குள்ள டைரக்டர். அவரால் உன் உயிருக்கு ஆபத்து வரலாம். எனவே காதலை விட்டு விடு என்று நிர்ப்பந்தித்தனர். நான் மறுத்தேன். இதனால் கோவையில் உள்ள மாமா வீட்டுக்கு அனுப்பி விட்டனர். என்னை சேரன் மிரட்டியது தாமினிக்கு தெரிய ஆரம்பித்து உள்ளது. இதனால் அவர் காலேஜ் போவதாக பொய் சொல்லி விட்டு எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார். எனக்கு போன் செய்து தகவல் சொன்னார்கள். நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லும் படி கூறினேன். காதலில் நான் உறுதியாக இருப்பேன்.
 நடிகரும், டைரக்டருமான சேரன் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் தனது மகளின் காதல் பற்றி பரபரப்பு கண்ணீர் பேட்டி கொடுத்தார்.
http://www.tamilstar.com/cinema-images/advt/cheran%20daughter%20Dhamini%20lover%20santhuru.jpg

நடிகரும், டைரக்டருமான சேரன், நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசினார். புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். அவருடன் தென் இந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரும் சென்று போலீஸ் கமிஷனரை சந்தித்தார். நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி மற்றும் டைரக்டர்கள் அமீர், ஜனநாதன், அஸ்லாம், கரு.பழனியப்பன், சுப்பிரமணியம் சிவா, வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் ஆகியோரும் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தனர்.
http://www.justknow.in/news_images/147202332seran.png
நேற்று முன்தினம், சேரன் மீது, அவரது மகள் காமினி புகார் மனு ஒன்றை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார். அந்த மனுவில், தனது காதலர் சந்துருவை, தனது தந்தை சேரன் மிரட்டுவதாக தெரிவித்து இருந்தார்.
http://media.dinamani.com/2013/08/03/cheran.jpg/article1715650.ece/alternates/w460/cheran.jpg
அந்த மனு அடிப்படையில், ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் சேரனிடம், உதவி போலீஸ் கமிஷனர் ஷியாமளாதேவி விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, புகார் கொடுத்த காமினியும் அங்கு இருந்தார். விசாரணை முடிந்த பிறகு, காமினி தனது தந்தை சேரனுடன் செல்ல மறுத்தார். காமினியை அவரது உறவுப்பெண் ஒருவர் வீட்டில் போலீசார் நேற்று முன்தினம் இரவு தங்க வைத்தனர்.
https://sphotos-b-ord.xx.fbcdn.net/hphotos-ash4/p480x480/480775_697395083619293_183566630_n.png
தனது மகள் கொடுத்த புகார் மனுவிற்கு மறுப்பு தெரிவித்தும், தனது மகளின் காதல் பற்றிய உண்மை நிலையை வெளியிட்டும், போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் சேரன் தெரிவித்து இருந்தார்.
http://www.epaper.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_26425898076.jpg
கமிஷனரை சந்தித்துவிட்டு வெளியில் வந்த சேரன், அங்கு காத்திருந்த ஏராளமான நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கண்ணீர்விட்டு அழுதுவிட்டார். உடன் நின்றிருந்த சரத்குமார், ராதாரவி, அமீர் ஆகியோர் அவரை சமாதானப்படுத்தினார்கள். இருந்தாலும் கண்ணீர் மல்க அவர் கூறியதாவது:-
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/1017617_420913708025387_157557343_n.jpg
பொதுவாக நான் காதலை ஆதரிப்பவன். நான் காதல் திருமணம்தான் செய்துள்ளேன். நான் பெரிய பணக்காரன் அல்ல. சாதாரண, மிகவும் கீழ்நிலையில் இருந்து வந்தவன் நான். இப்போதும் நான் பணக்காரன் அல்ல. சாதி, மத பேதம் பார்ப்பவனும் அல்ல. எனது பிள்ளைகளையும் அதுபோல்தான் வளர்த்துள்ளேன். எனது மகளை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் எனது மகளை முழு சுதந்திரம், உரிமை கொடுத்து வளர்த்தேன்.
http://ilakkiyainfo.com/new/wp-content/uploads/2013/08/seran-1.jpg
அவளது காதலை முதலில் நான் ஆதரித்தேன். ஆனால் ஒரு தகப்பன் என்ற முறையில், எனது மகளுக்கு கணவனாக வருபவரையும், எனக்கு மருமகனாக வருபவரையும், நல்லவரா, கெட்டவரா என்று பார்க்க கூடாதா? ஒரு தவறான பையனை எப்படி எனது மகளின் கணவனாக ஏற்றுக்கொள்ள முடியும். அந்த பையன் கொடுத்த தொல்லையால் மன உளைச்சல் அடைந்த எனது மகளை 15 நாட்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை கொடுத்தேன். அப்போது அவளுக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தது.

எனது மகளே வலிய வந்து கடந்த மாதம் 10-ந் தேதி அன்று, அந்த பையன் மீது புகார் கொடுத்தாள். அவன் ஒரு சேடிஸ்ட் என்றும், பல பெண்களுடன் சுற்றுகிறவன் என்றும், அவன் மிரட்டுகிறான் என்றும், அவனிடம் இருந்து தன்னை மீட்க வேண்டும் என்றும், பாதுகாப்பு தரவேண்டும் என்றும், புகாரில் கூறி இருந்தாள்.
http://www.soundcameraaction.com/wp-content/uploads/2013/08/4-470x358.jpg
இப்போது என்மகளே என்மீது, நான் மிரட்டுவதாக புகார் கூறி இருக்கிறாள். நான் வன்முறையை விரும்பாதவன். எனது படத்தில் கூட வன்முறை காட்சிகளை வைக்கமாட்டேன். எனது மகள் நல்லபடியாக என்னிடம் வருவாள். அவள் விரும்பும் பையன் நல்லவனாக இருந்தால், ஏற்றுக்கொள்ள தயார்.
http://www.newindianews.com/photos/full/2013/08/cheran_wife_004.jpg
இவ்வாறு அவர் கண்ணீருடன் உருக்கமாக தெரிவித்தார்.
http://mmimages.maalaimalar.com/Articles/2011/Feb/907feb1d-5ce0-4f2c-b017-835e485557d8_S_secvpf.gif
மேலும் அவர் கூறும்போது, நான் கொடுத்துள்ள புகார் மனு மீது, உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதி அளித்தார் என்றும் தெரிவித்தார். சேரன் வெளியில் வந்தவுடன், கமிஷனர் ஜார்ஜ், இந்த வழக்கை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் டாக்டர் சிவகுமார், உதவி கமிஷனர் சியாமளாதேவி ஆகியோரை அழைத்து பேசினார்.
http://img235.imageshack.us/img235/8044/p5a9mn.jpg
தனது மகளின் காதல் பிரச்சினையில் உண்மையில் நடந்தது என்ன? என்பதை டைரக்டர் சேரன், கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் விளக்கி கூறி உள்ளார்.
DSC_0134
சேரன் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனு விவரம் வருமாறு:-

http://www.justknow.in/news_images/1422976322director-cheran-interview.gif
சென்னை சூளைமேடு வள்ளலார் முதலாம் தெருவில் வசித்துவரும் சந்துரு என்ற சந்திரசேகரை கலை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்ததாகவும், அவரை விரும்புவதாகவும், தங்களுக்கிடையில் இருக்கும் காதல் கண்ணியமான முறையில் இருப்பதாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் காமினி என்னிடம் தெரிவித்தாள்.
http://www.tamilstar.com/cinema-images/advt/cheran%20press%20meet.jpg
உடனே நான் சந்துருவின் குடும்பத்தினரை அழைத்து பேசினேன். எனது மகள் படிப்பு முடியட்டும் என்றும், சந்துருவும் தனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளட்டும் என்றும், அதுவரை காத்திருக்கலாம் என்றும் தெரிவித்தேன். அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.
http://mimg.sulekha.com/tamil/yudham-sei/yudham-sei_m.jpg
ஆனால் அதற்கு பிறகு எனது மகள் கடந்த ஒரு ஆண்டுகாலமாக, ஒருவிதமான மன இறுக்கத்தோடு காணப்பட்டாள். இதுபற்றி எனது மகளிடம் கேட்டபோது, சந்துரு நல்லவர் இல்லை என்றும், இரண்டு, மூன்று பெண்களுடன் சுற்றுவதாகவும் அந்த பெண்கள் அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் பெண் ஒருவர் தன்னிடம் கூறினார் என்றும், இதனால் சந்துருவை விட்டு, விலக எண்ணியபோது, அவரது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் எனது மகள் என்னிடம் கூறினாள்.
http://tamil.oneindia.in/img/300x99/2013/08/04-cheran-16-600-jpg.jpg
ஆனால், சந்துரு தொடர்ந்து எனது மகளுக்கு தொல்லை கொடுத்து வந்தார். மேலும் எனது மகளின் ‘பேஸ் புக்’ விஷயங்கள் அனைத்தும் சந்துருவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு கட்டத்தில் சந்துரு எனது மகளிடம், பேஸ்புக்கில் ஆபாச தகவலை வெளியிடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்தார்.
http://www.alaikal.com/news/wp-content/uploads/cher1.jpg
இந்த பிரச்சினைகளில் இருந்து நீ விடுபட வேண்டும் என்றால், தனது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள பெரும் தொகை தனக்கு தரவேண்டும் என்றும், சந்துரு எனது மகளை பயமுறுத்தியபடி இருந்தார். பணம் தர முடியாவிட்டால், உனது தந்தை எடுக்கும் படத்தில் என்னை கதாநாயகனாக்க வேண்டும் என்றும் எனது மகளை, சந்துரு வலியுறுத்தி இருக்கிறார்.
http://4.bp.blogspot.com/_Dcezi5xfsqA/TUxapk-zKVI/AAAAAAAADYs/sIlOwAJ-LTg/s640/yudhamsei210111_4.jpg
இந்த இரண்டில் ஒன்று நடக்காவிட்டால், உன் பெயரையும், உன் குடும்பத்தின் பெயரையும் அசிங்கப்படுத்தி, நாசப்படுத்திவிடுவேன் என்றும் சந்துரு தெரிவித்துள்ளார். ஆனால் எனது மகள் இதுபற்றி என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால்தான் சந்துரு மீது, எனக்கு தெரியாமலேயே என்மகள் போலீசில் புகார் கொடுத்திருக்கிறாள்.
http://www.tamiltainer.com/poems/wp-content/uploads/2009/06/kathal.jpg
தொடர்ந்து சந்துரு கொடுத்த தொல்லைகளை தாங்க முடியாமல், சந்துரு மீது புகார் கொடுத்த விஷயங்களை பின்னர் எனது மகள் என்னிடம் தெரிவித்தாள்.
http://www.alaikal.com/news/wp-content/uploads/dar1.jpg
இந்த நிலையில்தான் எனது மகளே இப்போது என்மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளாள். சந்துரு எனது மகளை சூழ்நிலை கைதியாக வைத்துள்ளார் என்று அறிகிறேன். சந்துரு எப்படிப்பட்டவர் என்பதை ஒரு உயர் அதிகாரி மூலம் விசாரணை நடத்திட வேண்டும். ஏற்கனவே சந்துரு மீது என்மகள் கொடுத்த புகார் பற்றியும் உரிய விசாரணை நடத்த வேண்டும். எனது மகளுக்கு சந்துருவால் எந்த ஆபத்தும் வராதவாறு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன்.
 http://vannimedia.com/uploads/images/2c2d0982ac9de29572c9a17e47dfde82.jpg
பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராப் போன்ற படங்களில் காதலையும், அதனால் ஏற்படும் சுகத்தையும், சோகத்தையும் கவித்துவமாக சொன்னவர் டைரக்டர் சேரன். மகளின் காதலால் தனக்கு இவ்வளவு பெரிய தலைகுனிவு ஏற்படும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த சேரன் கண்ணீர் விட்டு அழுததை பார்க்கும் போது... ‘‘ஏன்தான் பொண்ணுங்க பெத்தவங்களை இப்படி தவிக்க விடுகிறாகளோ’’ என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
 http://4.bp.blogspot.com/-xI9BeKY1vec/UfuGiu9lTzI/AAAAAAAAAAs/fxaOQutV2_c/s320/Cheran2.jpg
ஆனால் இதைப்பற்றியெல்லாம் சேரனின் மகள் தாமினி துளி அளவுகூட நினைத்து பார்க்கவில்லை. இப்போது அவர் மனதில் இருப்பதெல்லாம் காதல்... காதல்... காதல்... இது மட்டும்தான், தாமினியின் காதலன் நல்லவர் இல்லை. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று சேரன் அளித்த புகார் இந்த விவகாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_51961481572.jpg
இதனால் தாமினியின் நலன் கருதி ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து பெண் போலீசார் அவருக்கு ‘கவுன்சிலிங்’ கொடுத்தனர்.
ஆனால் தாமினியோ சந்துரு மீது விடாப்பிடியாக காதல் கொண்டுள்ளார். நேற்று மதியம் 2 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை தாமினியிடம் உதவி கமிஷனர் ஷியாமளாதேவி பேசிப் பார்த்தார். அப்போது அவர் எந்த பிடியும் கொடுக்காமல், எதைப் பற்றியும் சிந்திக்காமலேயே பேசியுள்ளார். ‘‘உனது படிப்பு முடியட்டும், காதலுக்கு நாங்கள் யாரும் எதிரிகள் அல்ல. காதலன் சந்துருவும் நல்ல வேலையை தேடிக் கொள்ளட்டும் அதுவரை பொறுத்திரு’’ என்று தாமினியிடம் பெண் போலீசார் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதில் அளித்த தாமினி, சினிமா பாணியில் வசனம் பேசியுள்ளார். கூழோ... கஞ்சியோ குடித்து வாழ்ந்து விடுவேன். ஆனால் காதலன் சந்துருவை மட்டும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
மணிக்கணக்கில் பேசியும் தாமினி மனம் இறங்கவில்லை. தனது காதலை எந்த சூழ்நிலையிலும் என்னால் கைவிடமுடியாது என்று உறுதியாக கூறிவிட்டார். அதே நேரத்தில் பெற்றோருடன் இனி சேர்ந்து வாழப்போவதில்லை என்றும் போலீசாரிடம் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால் வேறு வழியின்றி மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தாமினியை நள்ளிரவில் போலீசார் சேர்த்தனர்.
 
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமினி–சந்துருவின் காதல் விவகார பேச்சுவார்த்தையை போலீசார் ஒத்தி வைத்துள்ளனர். நாளை காலையில் 2 தரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்துகிறார்கள். அப்போது தாமினிக்கு மீண்டும் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. இதில் அவர் மனம் மாறுவாரா? காதல் விவகாரம் முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 http://eluthu.com/images/poemimages/b/15120.gif
இந்த நேரத்தில் சேரனைப் பற்றி நினைக்கும்போது காதலை அவர் உறுகி... உறுகி படமாக்கி இருந்த ஆட்டோகிராப் பட பாடல்தான் மனதில் தோன்றுகிறது.
‘‘ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே.’’
 டைரக்டர் சேரனின் மகள் தாமினி நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் காதலன் சந்துருவை கொலை செய்ய முயற்சி நடப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறி இருந்தார்.
http://3.bp.blogspot.com/-NF6zjAQzboE/Uc7wkfPmqEI/AAAAAAAAAgc/b_Yea4zHdG8/s1068/What-is-love.jpg
இது தொடர்பாக சந்துரு அளித்த பேட்டியிலும், காரை ஏற்றி தன்னை கொலை செய்ய ஒரு கும்பல் முயன்றது என்றும் அவர்களிடம் இருந்து நான் தப்பித்து விட்டேன் என்றும் கூறி இருந்தார்.
http://farm4.static.flickr.com/3404/4562367642_8d6faf7d6f.jpg
இதையடுத்து சூளைமேடு வள்ளலார் தெருவில் உள்ள சந்துருவின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காதல் விவகாரம் காரணமாக சந்துருவுக்கோ, அவரது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கோ ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகளின் காதல் விவகாரம் குறித்து டைரக்டர் சேரன் மனைவி செல்வராணியுடன் இன்று பகல் 12.30 மணிக்கு வடபழனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

என் மனைவியை இதுவரை வெளி உலகுக்கு நான் அறி முகப்படுத்தியதில்லை. இப்போது அறிமுகம் செய்கிறேன். இதுதான் என் மனைவி. எனக்கு 2 மகள்கள். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். பணக்காரன் அல்ல. அப்பா தியேட்டர் ஊழியர். அம்மா ஆசிரியை. எனவே என் மகள்களுக்கு சினிமா பின்னணி, பணக்கார வாசனையும் வரக்கூடாது என்பதற்காக அவர்களை கவனமாக வளர்த்தேன்.

மகளை தோழியாக பார்க்க வேண்டும், சுதந்திரமாக நடத்த வேண்டும், காதலித்தால் எதிர்க்க கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். நானும் என் மனைவியை காதல் திருமணம் செய்தேன். இன்று வரை என் இளைய மகளுக்கு நாங்கள் என்ன ஜாதி என்று சொன்னதில்லை. மூத்த மகள் விவரம் தெரிந்தவள். இளைய மகள் தாமினிக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது. எனவே செல்லமாக வளர்த்தோம். அவருக்கு 18 வயதில் காதல் வந்தது. நாங்கள் எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கிறோம் என்றோம். அதன்பிறகு பையனைப் பற்றி விசாரித்தோம். அவனது பின்னணி பயத்தை ஏற்படுத்தியது. இருதய நோயுள்ள தாயுடன் வாழ்ந்தான். வேலை இல்லை. நான் நேரில் பையன் (சந்துரு) குடும்பத்தினரை சந்தித்தேன். மாதம் 10, 15 ஆயிரம் சம்பளத்துக்கு வழி செய்து கொள். வாழ்க்கையில் முன்னேறிக்காட்டு. 3 வருடத்துக்குப்பின் திருமணம் செய்து வைக்கிறேன். அது வரை இருவரும் வெளியில் சுற்றாமல் இருங்கள் என்றேன். அதை ஏற்றுக் கொண்டான்.

ஆனால் எனக்கு தெரியாமல் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் எனது மகளை எங்களுக்கு எதிராக தூண்டி விட்டான். சந்துருவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. பேசாமல் இருந்தால் செத்து விடுவேன் என்று என் மகளையே என்னிடம் பேசச் செய்தான். உடனே நான் போன் செய்து அவனுடன் மகளை பேச வைத்தேன். எந்த அப்பனும் செய்யாததை செய்தேன். பிறகு அவன் நடவடிக்கைகள் வேறு மாதிரி இருந்தது. நிறைய பொய் பேசினான். என் மகளிடம் பேசக் கூடாது என்று சொன்ன நாட்களில் வேறு சில பெண்களுடன் இரவு வெகு நேரம் சந்துரு பேசி இருக்கிறான். அந்த ஆதாரங்களை திரட்டினோம்.

என் மூத்த மகளிடமும் ‘‘ஐ லவ் யூ’’ என்று பேஸ்புக்கில் கூறியுள்ளான். 7, 8 பெண்களுடன் அவன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க தயார். நடத்தைகள் மோசம், பொருளாதாரத்திலும் திருப்தி இல்லை. பெண்களுடன் தகாத தொடர்பு. இதையெல்லாம் பார்த்த பிறகு ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும். அதுமட்டு மல்ல என் மகளிடம் உன் அப்பா படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடு செய் என்று கூறியுள்ளான்.
http://eluthu.com/images/poemimages/a/3873.gif
எழில் இயக்கும் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று மகளே என்னிடம் கூறினாள். என் மகளை வைத்து சொத்துக்களையும் பணத்தையும் பறிக்க திட்டமிட்டு இருப்பதை உணர்ந்தேன். அவனை அடிக்கவில்லை. கொலை மிரட்டல் விடுக்கவும் இல்லை. என் மகளே ஒரு கட்டத்தில் மனம் மாறி அவனை வேண்டாம் என்றாள். இப்போது திடீர் என்று அவளது மனதை மாற்றி மூளைச் சலவை செய்து எனக்கு எதிராக திருப்பி விட்டுள்ளான்.

இவ்வாறு சேரன் கூறினார்.

டைரக்டர் அமீர் கூறும் போது, ‘‘சந்துரு நல்லவன் அல்ல. குடும்பமும் நல்ல குடும்பம் இல்லை. 3 பெண்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். நல்ல குடும்பம் என்றால் நானே சேர்த்து வைப்பேன். குடும்ப பின்னணியை உளவுத்துறை கண்டு பிடிக்க வேண்டும் என்றார். சேரனும், மனைவியும் அழுது கொண்டே பேட்டி அளித்தார்.
டைரக்டர் சேரன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து அளித்த புகாரில், தாமினியின் காதலன் சந்துரு மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். 3 பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தனது மகள் தாமினியின் ‘பேஸ்புக்’ விஷயங்கள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

தன்னை வைத்து படம் எடுக்க வேண்டும், அல்லது பெரிய தொகையை எனக்கு தர வேண்டும். இல்லையென்றால் உனது குடும்பத்தை அசிங்கப்படுத்தி விடுவேன் என்றும் சந்துரு மிரட்டியதாக சேரன் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் தாமினி பற்றி பேஸ்புக்கில் ஆபாசமான தகவல்களை வெளியிடுவேன் என்று சந்துரு மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குற்றச் சாட்டுகள் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று சேரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சேரனின் குற்றச்சாட்டு குறித்து தாமினியின் காதலன் சந்துரு இன்று மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:–

நான் சினிமாவில் டான்சராக உள்ளேன். மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனமாடியுள்ளேன். என்னை பற்றி தவறான பல தகவல்களை சேரன் கூறி இருக்கிறார். நான் குடிகாரன் என்றும், பல பெண்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி உள்ளார். என்னை பற்றி தாமினிக்கு தெரியும்.

நான் நல்லவன் இல்லை என்று அவர் கூறட்டும். எங்கள் இருவரையும் பிரிப்பதற்கு டைரக்டர் சேரன் சதி திட்டம் தீட்டி செயல்படுகிறார். நாங்கள் இருவருமே சேர்ந்து வாழ விரும்புகிறோம். எனவே போலீசார் இதற்கு மேல் பேச்சு வார்த்தை நடத்தாமல் எங்களை சேர்த்து வைக்க வேண்டும்.
தனது மகளின் காதல் விவகாரம் குறித்து டைரக்டர் சேரன் தனது மனைவியுடன் இன்று பேட்டி அளித்தார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார். இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்.

சேரன் கூறும் போது ‘‘சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்’’ என்றார். அமீர் கூறும் போது, ‘‘சந்துருவின் குடும்பத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி உளவு பிரிவு போலீசார் விரிவாக விசாரித்தால் உண்மை தெரியும்’’ என்றார்.

இதனை டி.வி. நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும், அவரது சகோதரிகளும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கொதிப்படைந்தனர்.

இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ‘‘எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்’’ என்றார். சந்துரு கூறும்போது, ‘‘தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா’’ என்றார்.
டைரக்டர் சேரன் மகள் தாமினி மைலாப்பூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாமினியின் காதலன் சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ளும்படி அவர் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

ஐகோர்ட்டு நீதிபதிகள் தனபாலன், சி.பி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் ஈஸ்வரி அம்மாள் தரப்பில் வக்கீல் சங்கரசுப்பு ஆஜரானார். வக்கீல் சங்கரசுப்பு நீதிபதிகளிடம் கூறியதாவது:–

திரைப்பட இயக்குனர் சேரன் மகள் தாமினியை வாலிபர் சந்துரு காதலித்தார். சேரன் அடி ஆட்களை அனுப்பி சந்துருவை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இது குறித்து சேரன் மகள் தாமினி போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் விசாரணை என்ற பெயரில் சேரன் மகள் தாமினியை காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் நீதிபதி களிடம் கூறினார்.

இதை கேட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், ‘‘ஈஸ்வரி அம்மாள் தாக்கல் செய்த மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும். பிற்பகல் அந்த மனு விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது இயக்குனர் சேரன் மகள் தாமினியை சென்னை ஐகோர்ட்டில் போலீசார் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தர விட்டனர்.

நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின்றாரே
மகாகவி பாரதியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக