ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

வேலூர் கோட்டை ஒரு வரலாற்றுப்பார்வை - கோ.ஜெயக்குமார்.

வேலூர் கோட்டை ஒரு வரலாற்றுப்பார்வை - கோ.ஜெயக்குமார்.


வேலூர், இந்திய மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த நகரமும், வேலூர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. இக்கோட்டையின் உள்ளே இந்துக் கோயில், கிறித்தவ ஆலயம்,இஸ்லாமியரின் மசூதி ஆகியவை உள்ளன.
இந்த நகரில் பல கல்லூரிகள், பழமை வாய்ந்த கோயில்கள் மற்றும்இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான கிறித்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் உள்ளது.வேலூருக்கு அருகில் இரத்தனகிரி பாலமுருகன் கோயில் உள்ளது.
 
வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின்மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார். பின்னர்மராட்டியர்களாலும், தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர்.
1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில்குறிப்பிடுகின்றனர்.வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயபட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து தரிசித்து செல்கின்றன
 
வேலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின்மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம்வேலூர் ஆகும். 2011 இல் இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,928,106 ஆகும்

ஆண்கள்1,959,676 பெண்கள்1,968430 வளர்ச்சி விகிதம் 12.96 2001ல் 14.90 ஆக இருந்தது. பாலின விகிதம் 1004 அடர்த்தி 1077.கி கல்விஅறிவு விகிதம் 79.65 ஆண்கள் 86.96 பெண்கள்72.43
19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. 1989 இல் அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் அதிகமாக நடைபெறுவது தோல் தொழில்.ஆம்பூரிலும்,ராணிப்பேட்டையிலும்,வாணியம்பாடியிலும்அதிகளவு தோல் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன.ஆம்பூர் பிரியாணி சிறப்பு பெற்றது.
வேலூர்க் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூரில் அமைந்துள்ளது. இது 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர்தலைவர்கள் ,இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. கருங்கல்லால் கட்டப்பட்ட இக் கோட்டை இதன் பாரியமதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது.
நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரித்தானியருக்கும் இக் கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக் கோட்டை பிரித்தானியர்களிடமே இருந்தது. பிரித்தானியர் காலத்தில் இக் கோட்டையிலேயே திப்பு சுல்தான்குடும்பத்தினரைச் சிறை வைத்திருந்தனர். இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான்.
இக் கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறிஸ்தவ தேவாலயம், பள்ளிவாயில் என்பனவும் உள்ளன. பிரித்தானியருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி இக் கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்.
விஜயநகரப் பேரரசு இந்தியாவின் தக்காணப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இது 1336 ஆம் ஆண்டில்முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது
இந் நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில்உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான டொமிங்கோ பயஸ் (Domingo Paes),பெர்னாவோ நுனிஸ் (Fernao Nuniz), நிக்கோலோ டா கொன்ட்டி(Niccolò Da Conti) ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்டதொல்லியல் ஆய்வுகளும் விஜயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.
இப் பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் ஹம்பியில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணிதென்னிந்தியக் கட்டிடக்கலையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் நாட்டார் மரபுகளின்தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் திராவிடக் கட்டிடக்கலையிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில்வட தக்காணத்துச் சுல்தானகக் கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.
ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் காணப்படும் ஆரியரல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களே நாயக்கர் இனத்தவர்கள். இவர்களின் தாய் மொழி தெலுங்கு. இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்கள் ஆதியில் காப்பு என்னும் இனத்தை சேர்ந்தவர்கள். காம்பு எனப்படும் பழங்குடி இனத்தவர்களின் மரபுகளாக அறியப்படுகிறார்கள். இவர்களே நாகர்கள் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் நாயுடு, நாயக்கர், ரெட்டி, ராவ், ராயர், செட்டே, உடையார்,ராயுடு என்று பலபெயர்களில் வாழுகிறார்கள். தமிழகத்தில் கொங்கு நாட்டுகப் பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம்,ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர்,மதுரை, திண்டுக்கல், தேனீ, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும், செஞ்சி, தஞ்சை, சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களிலும் அதிகமாக வாழுகிறார்கள். தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டம் கொண்ட இனம் அல்லது கிளை இனம் தான் மக்கள் தொகையில் அதிக அளவில் உள்ளவர்கள். பொதுவாக நாட்டை ஆண்டவர்கள், பாளையத்தை ஆண்டவர்கள் (குறுநிலத்தை) நாயக்கர் என்று அழைக்கப்பட்டனர்.
ஆந்திராவில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள காப்பு (ராஜ கம்பளம், பலிஜா, கவரா) போன்றோர்களும், தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர்களின் பெரும் பகுதியினர் வட தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். கம்மவார், அகமுடையாரில் சிலர் போன்றோர்கள் நாயக்கர்களாக அறியப்படுகிறார்கள்.
நாயக்கர்களில் காப்பு இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன்,கிருஷ்ணதேவராயன், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள்,விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற அரசர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள்.
வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும். 1805இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்திய துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளஙளை போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணயிட்டார்

சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியை போட்டு அதில் தோல் பட்டையை போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்த கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது. இதற்கிடையில், வேலூரில் சிறை வைக்கப் பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன்கள் துருப்புக்களுக்கு ஆரவாரம் கொடுத்து தூண்டி விட்டதாக சொல்லப் படுகிறது
10-7-1806 அதிகாலையில் பல ஆங்லேய அதிகாரிகள் அவர்கள் படுக்கையில் கொல்லப்பட்டனர். அங்கிருந்த 350 பிரிட்டிஷ் ஆட்களில், 100 பேர் கொல்லப் பட்டனர். ஆனால் இந்த கலகம் அரசியல், ராணுவ குறிக்கோள்களுடன் எழவில்லை. அதனால், இந்திய துருப்புக்களை, அதிகாரிகளை கொன்று களித்து வந்தனர். அவர்கள் வேலூர் கோட்டையின் கதவைக் கூட மூடவில்லை. இரண்டு நாட்களில், ஆர்காட்டிலிருந்த 19ம் சிறிய குதிரைப் படை (19த் லைட் ட்ரகூன்ஸ்) வேலூர் நோக்கி பாய்ந்து, வேலூர் கோட்டையை கைப்பற்றியது. அந்த சண்டையில் 350 துருப்புகள் உயிர் துறந்தன; அந்த அளவு காயமடைந்தனர். மற்ற இந்திய துருப்புக்களும் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்ட துருப்புகள் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப் பட்டு, பீரங்கி சுட்டு, கொல்லப் பட்டனர்.


1560ல் - சின்ன பொம்ப நாயக்கால் கட்டபட்டது (விஜயநகர பேரரசு)
1650ல் - பிஜபூர் சுல்தான் கைபற்றினார்.
1676ல் - மராட்டியர்கள் கைபற்றினார்கள்.
1708ல் - தௌலத்கான் (டெல்லி) கைபற்றினார்.
1760ல் - பிரிட்டிஷ்கரர்களல் கைபற்றபட்டது.
1806ல் - முதல் சிப்பாய் கலக்கம் நிகழ்ந்தது.

புராணங்களுக்கு ஆதாரங்கள் தேவையில்லை. வரலாறுகளுக்கு நிச்சயம் ஆதாரம் தேவை. மன்னர்கள் வரலாறு, இந்தியாவின் சுதந்திர வரலாறுகளை  சொல்லும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆதாரமாய் கம்பீரமாய் நிற்கிறது வேலூர் கோட்டை

வேலூர் மாநகரின் மையத்தில் 133 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது வேலூர் கோட்டை. கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு  தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டுக்கொண்டுயிருந்தபோது வேலூர், திருப்பதி, சென்னை போன்றவை விஜயநகர பேரரசுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. விஜயநகர பேரரசுவின் பிரதிநிதியாக 1566ல் இருந்த பொம்முநாயக்கர் என்ற குறுநில மன்னரால் வேலூர் கோட்டை கட்டப்பட்டது
கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த கோட்டை வலிமையானது. கோட்டையை சுற்றி அகழியும் வெட்டப்பட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டது

நாயக்கர்களிடமிருந்து 1650ல் பிஜப்பூர் சுல்தானால் கைப்பற்றப்பட்டது. 25 ஆண்டுகால ஆட்சிக்கு பின் 1676ல் மராட்டியர்கள் கைப்பற்றினர். 30 ஆண்டு ஆட்சிக்கு பின் 1708ல் டெல்லியை ஆண்ட தௌத்கான் கைப்பற்றினார். அப்போது நவாப்களின் கட்டுப்பாட்டில் வேலூர் கோட்டையிருந்தது
கர்நாடகா நவாப்கள் என அழைக்கப்பட்டவர்கள் வேலூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள ஆற்காட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் டெல்லி தௌத்கான் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரமாக வெளியேறியபோது நவாப்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சுதந்திர பகுதியாக மாறின
நவாப்கள் ஆங்கிலேயரின் நண்பர்களாக இருந்தனர். நவாப் வசமிருந்த வேலூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. 1760ல் முதல் ஆங்கிலேயர் அதன் ஆட்சியாளர்கள் ஆனார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் வென்றயிடம் ஆற்காடு. அவர்கள் அங்கிருந்து ஆளும்போது அருகில் இருந்த வேலூர் கோட்டையை வெடிமருந்துகள், இராணுவ வீரர்கள் பாதுகாக்கும் இடமாக வைத்திருந்தனர்
மராட்டிய புலி திப்புசுல்தான் இறந்தபின்னர் அவரது குடும்பத்தை இங்கு தான் முதலில் சிறை வைத்தனர் ஆங்கிலேயர்கள். அதேபோல் இலங்கை கண்டி மாகாணத்தின் கடைசியரசர் விக்கிரமராஜசிங்கன் மற்றும் அவரது மனைவி மக்களை இந்த கோட்டையில் தான் இறக்கும் வரை சிறை வைக்கப்பட்டனர். அதேபோல் விஜயநகர பேரரசின் அரசராக இருந்த ரங்கராயன் இந்த கோட்டையில் வைத்து தான் கொல்லப்பட்டார்
 சிப்பாய் புரட்சி

ஆங்கிலேயர் தென்னிந்தியாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபின் வட இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள். அப்போது 
ஆங்கிலேய இராணுவத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் பணியாற்றினர். இவர்கள் எத்தனை தியாகங்கள் செய்தாலும் அதனை பிரிட்டிஷ் அரசு அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இது அவர்கள் மனதில் அனலாய் தகித்துக்கொண்டு இருந்தது. அந்த நேரம் வீரர்களுக்கு பசு, பன்றி நெய் தடவப்பட்ட வெடிகுண்டுகளை போர் களத்தில் பயன்படுத்த வேண்டும் என்றனர் ஆங்கிலேய அதிகாரிகள். இதற்கு இரு தரப்பு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்
இதனை பயனபடுத்திக்கொண்ட திப்புவின் வாரிசுகள் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி செய்ய திட்டம் வகுத்தனர். அதன்படி நீண்ட திட்டம் வகுத்து மக்களிடம் ரகசிய பிரச்சாரம் செய்யப்பட்டு நம்பிக்கையான படை வீரர்கள் மூலம் தகவல் பறிமாறப்பட்டு தயார் செய்யப்பட்டது
1806 ஜீலை 10ந்தேதி புரட்சிக்கான நாளாக ரகசியமாக குறிக்கப்பட்டது. அன்று திப்புசுல்தானின் மகன் ஒருவருக்கு திருமணம். விடியற்காலை புரட்சி தொடங்கியது. ஆங்கிலேய அதிகாரிகள், வீரர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கோட்டையில் திப்புசுல்தானின் புலி கொடியேற்றட்டப்பட்டது

அடுத்த ஆறு மணி நேரத்தில் ஆற்காடு, சித்தூர் பகுதியில் இருந்து படைகள் வரவழைக்கப்பட்டு ஆங்கிலேயர்கள் கோட்டையை மீட்டனர். திப்புவின் வாரிசுகளின் பாதுகாவலர்கள், புரட்சியின் தளபதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

அடுத்த சில நாட்களில் திப்புவின் வாரிசுகள் வடமாநிலங்களுக்கும், அவர்களது நம்பிக்கையான தளபதிகள் திருநெல்வேலிக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அனுப்பி தங்களது பாதுகாப்பில் வைத்துக்கொண்டனர். இந்த புரட்சி தான் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைக்காக நடத்தப்பட்ட முதல் புரட்சியாகும்
சர்வ மதம்

கோட்டைக்குள் நுழைந்ததும்மே வடக்கு பக்கம் இந்துக்களுக்காக ஜலகண்டேஸ்வரர் கோயிலும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தெற்கு புறம் மசூதியும், ஆங்கிலேயர்கள் பிரார்த்தனை செய்ய தென்மேற்கு பகுதியில் சர்ச்சும் கட்டப்பட்டுள்ளது
கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் 1566 பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது.

திப்புசுல்தான் வாரிசுகள், குடும்பத்தார், உறவினர்கள் கோட்டைக்குள் தொழுகை நடத்த மசூதி கட்டப்பட்டது. இரண்டாயிரம் பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம். அதேபோல் தென்னிந்தியாவின் முதல் அரபுக்கல்லூரியான ஜாமி பாக்கியத்துல்ல என்ற கல்லூரி இதன் அருகே உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோட்டைக்குள் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகள், அவரது குடும்பத்தார் பிரார்த்தனை செய்ய 1846ல் புனித ஜான் தேவாலயம் கட்டப்பட்டது
அருங்காட்சியகம்

கோட்டைக்குள் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு திப்புசுல்தான் வாரிசுகள் பயன்படுத்திய நாணயங்கள், கிண்ணங்கள், வாள்கள், வட ஆற்காடு மாவட்டத்தில் கிடைத்த தொல்பொருட்கள், ஓடுகள், மண்பானைகள், கல்வெட்டுகள், செப்பு தகடுகள், கத்திகள், பீங்கன் கிண்ணங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டைக்குள் உள்ள கட்டிடங்கள் திப்பு மகால், ஐதர் மகால், பேகம் மகால், கண்டி மகால், பாதுஷா மகால் என பெயர் வைத்து அழைக்கப்படுகின்றன
காவல்துறை பயிற்சி கல்லூரி, வட்டாச்சியர் அலுவலகம், பத்தரப்பதிவு அலுவலகம் என பல அரசு அலுவலகங்கள் உள்ளே இயங்குகின்றன
கோட்டையின் தென்கிழக்கு மூலையில் கோட்டை உச்சியில் தேசியகொடி ஏற்ற 100 அடி கொடிமரம் அமைத்துள்ளனர். இந்த கோட்டை பற்றி 1650ல் வந்த ஜாக் டி கோட் என்ற ஐரோப்பிய பயணி, இது போன்ற கோட்டையை நான் எங்கும் பார்த்ததில்லை என வர்ணித்துள்ளார். வேலூர் கோட்டை வரலாற்றை போற்றும் வகையில் 2006ல் வேலூர் புரட்சி நடந்த 200வது ஆண்டை முன்னிட்டு தபால் தலை வெளியிடப்பட்டது

படகு சவாரி

கோட்டை அகழியில் படகு சவாரி வசதியை சுற்றுலாத்துறையும் - தொல்பொருள் துறையும் செய்து தந்துள்ளது. தினமும் மாலை 3 மணி முதல்மணி வரை படகில் அகழியில் அரை வட்டமடிக்கலாம். கோட்டைக்கு வெளியே மூன்று இடங்களில் பூங்கா வசதி செய்து தந்துள்ளார்கள். விடுமுறை நாட்கள், மாலை நேரங்களில் உட்கார இடம்மில்லாத வகையில் கூட்டம் இந்த பூங்காக்களில் நிரம்புகிறது. குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது
வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட கண்டி மன்னன் விக்ரமராஜா அவனது மனைவிகள் இறப்புக்கு பாலாற்றங்கரையில் முத்து மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிப்பாய் புரட்சியின் போது இறந்த ஒரு தளபதியின் கல்லறை உள்ளே வைக்கப்பட்டுள்ளது. கோட்டைக்கு வெளியே வடக்கு 
பகுதியில் சிப்பாய் புரட்சியில் இருந்த வீரர்கள் நினைவாக நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது
புதர் மண்டிக்கிடக்கும் வேலூர் கோட்டை தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டையை எப்போது வேண்டுமானாலும் சுற்றி பார்க்கலாம். அருங்காட்சியகம், மஹால்களை மாலை 5 வரை மட்டுமே பார்க்க அனுமதி. காதலர்களால் நிரம்பி வழிகிறது கோட்டை.  ஒரு முறை சென்றால் இந்த கோட்டை தனக்குள் வைத்துள்ள வரலாறுகள் நமக்கு பல படிப்பினைகளை, வரலாற்று தகவல்களை வழங்குகிறது
வழித்தடம்

சென்னை, பெங்களுரூ மட்டும்மல்ல தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நேரடியாக இங்கு வர பேருந்து வசதியுள்ளன. இரயில் சேவையும் உள்ளது. இரயிலில் வர விரும்புபவர்கள் காட்பாடியில் இறங்கி 10 ரூபாய் ஆட்டோ அல்லது 4 ரூபாய் டவுன் பேருந்தில் சென்றால் கோட்டை எதிரே இறக்கி விடுவார்கள். தங்கவும், உணவுக்கும் ஏகப்பட்ட விடுதிகள் உள்ளன. வேலூரில் சுற்றி பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன